இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சஜித்தின் விஞ்ஞாபனம் விரைவில் வெளியீடு
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வெளியிடவுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் (22) கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
பட்டியிலிடப்படவுள்ள விடயங்கள்
தமது ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பொருளாதார மீட்சித் திட்டங்கள், வெளிவிவகாரக் கொள்கை என்பன உள்ளிட்ட விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பட்டியிலிடப்படவுள்ளன.
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய உறுதிமொழியும் வழங்கப்படவுள்ளது.
மேலும், மலையகத் தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்களும் அதில் முன்வைக்கப்படவுள்ளன.