கைது செய்யப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை - இது என்ன ஜனநாயகம் என கேள்வி
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை, இது என்ன ஜனநாயகம்? என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை துறைமுக பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகை தந்து, ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டி தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை பார்வையிட முற்பட்ட போது அதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு வினவியுள்ளார்.
இதன்போது மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணிகள், பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாவிட்டால் நாட்டில் என்ன ஜனநாயகம் உள்ளது என வினவியுள்ளார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri