பிரதமர் பதவி தொடர்பில் இரகசியம் ஒன்றை வெளியிட்ட சஜித் பிரேமதாச
பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைத்து பதவியேற்று சில தினங்களின் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர மொட்டுக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இனிப்புகளுக்கு ஏமாற மாட்டேன்
இதனை புரிந்துக்கொள்ள்ளாத அளவுக்கு தான் அரசியலில் அனுபவமில்லாதவன் அல்ல எனவும் அப்படியான இனிப்புகளுக்கு ஏமாற மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
தம்மால் வேலைகளை செய்ய முடியவில்லை என அரசாங்கம் கூறுகிறது. இப்படியான அரசாங்கத்திடம் நாங்கள் தேர்தல் ஒன்றை கோருகிறோம். மக்கள் போராட்டம் காரணமாக முன்னாள் நிதியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் அடுத்தடுத்து வீட்டுக்கு சென்றனர்.
மொட்டுக்கட்சியின் தலைவர்கள் தமது விசுவாசமானவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்
அதற்கு பதிலாக தந்திரமாக பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமக்கு விசுவாசமான தற்போதைய ஜனாதிபதியை தெரிவு செய்தனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.