கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் கோவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.
மருத்துவர்களின் கடுமையான ஆலோசனைகளின் அடிப்படையில் தாம் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக சஜித் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச கோவிட் தொற்றுக்கு இலக்காகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு கொவிட் தொற்றுக்காக சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கடுமையான ஆலோசனையின் பேரில் இன்று நான் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தடுப்பூசி போடத் தவறினால் கொவிட் தொற்று மீண்டும் ஏற்படலாம் என்றும் அது ஆபத்தானதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
— Sajith Premadasa (@sajithpremadasa) August 3, 2021
கோவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாவிட்டால் இன்னொரு தடவை தொற்று ஏற்பட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதனால் தாம் தடுப்பூசி ஏற்றிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதனை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
