இரட்டை வேடம் போடும் சஜித்! சாடுகின்றார் அமரவீர
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இரட்டை வேடம் போடுகின்றார் என கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (07.10.2022) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உரை
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதியின் உரை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சபையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
பொறுப்புக்களை ஏற்பதன் மூலம் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொண்டே அன்று அவர் பொறுப்பை தவிர்த்தார்.
இப்போது எந்தவிதத்திலும் அவ்வாறான பொறுப்பை இந்த அரசாங்கத்தால் தான் எற்கப்போவதில்லை என தெரிவித்து வருகின்றார்.
இரட்டை வேடம்

இதன் மூலம் அவரது இரட்டை வேடம் புலப்படுகின்றது.
இப்போது நிபந்தனைகளை
முன்வைக்கும் அவர் பொறுப்புக்களை பாரமெடுத்து அதன் பின்னர் அத்தகைய
நிபந்தனைகளை முன்வைத்திருக்கலாம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.