நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க சஜித் கட்சி முடிவு: மனோ, ஹக்கீம், ரிஷாத் அணிகள் பங்கேற்பு
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய நாடாளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெறவுள்ளது.
அமர்வை புறக்கணிப்பு
அத்துடன் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையும் குறித்த அமர்வை புறக்கணிக்கவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்தாலும் அதன் பங்காளிக் கட்சிகளான ஶ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் என்பன பங்கேற்கவுள்ளன.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
