பறிமுதல் செய்யப்படும் கடன் செலுத்த முடியாதவர்களின் சொத்துக்கள்: சஜித் பிரேமதாச விடுத்துள்ள கோரிக்கை
கடன் செலுத்த முடியாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
கைத்தொழில் முயற்சியான்மையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இந்த நவடிக்கையின் மூலம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடன் பெற்றுக் கொண்டவர்களின் சொத்துக்களை நீதிமன்றின் தலையீடு இன்றி பறிமுதல் செய்யம் பராட்டே என்னும் சட்டத்தை அகற்றுமாறு அவர் கோரியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள், கோவிட் பெருந்தொற்று மற்றும் வங்குரோத்து நிலைமை போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியான்மையாளர்களின் சொத்துக்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் தலையீடு இன்றி சொத்துக்களை கைப்பற்றி ஏலத்தில் விடும் பராட்டே சட்டத்தை உடன் நிறுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, இந்த பாராட்டே சட்டத்தை இடைநிறுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்காலிக அடிப்படையில் இந்த சட்டத்தை இடைநிறுத்துவது குறித்து இன்றைய தினம் ஆராயப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |