கல்வியை ஆபாசமாக்கும் முயற்சிகளுக்கே எதிர்ப்பு!சஜித்
கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரகாரம், கிதுல்கல பிரதேச வைத்தியசாலைக்கு 33 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒருபோதும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. கல்வியில் ஆபசத்தை புகுத்துவதற்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.
பல கட்ட நடவடிக்கை
இந்தப் பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்குப் பல கட்ட நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியுள்ளன, ஆனால் இன்று அது எதுவும் முடிக்கப்படவில்லை. ஆகையால் இதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.
குறைபாடுகள், மீளாய்வுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால், இந்த ஆபாச விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கா. நோய்வாய்ப்பட்டவர்களைகே குணப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையில் நலவை நாடவுமே வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு உபகரணங்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகின்றோம்.

இதுவரை காலமும் அரச அதிகாரத்துடனே நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் பெறுமானம் சேர்க்கப்பட்டு வந்தன.
ஆனால் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாம் நாட்டுக்கு பெறுமானம் சேர்க்கும் பணியை முன்னெடுத்து வருகின்றோம். மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காகவே இதனைச் செய்து வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் ஆட்கள் - வெறிச்சோடிய யாழ். பிரதான பஸ் நிலையம்!
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam