சஜித் நன்றாக ஆங்கிலம் பேசுவதனால் IMF கடன் வழங்காது! அமைச்சர் சூளுரை
எதிர்க்கட்சி தலைவர் விவரமற்றவர் என்பது நாட்டுக்கு பாதிப்பான ஓர் விடயம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் பொருத்தமற்றவை என எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் அல்லது கடன் வழங்கும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுக்கு எம்மால் நிபந்தனைகளை விதிக்க முடியாது. பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு மட்டுமே எம்மால் முடியும்.
முட்டாள்தனமான கருத்து
ஆங்கில மொழியை ஆழமாக பேசுவதனால் சில கடினமான வார்த்தைகளை பயன்படுத்துவதனால் சர்வதேச நிறுவனங்கள் கடனுதவி வழங்கி விடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 9 பில்லியன் டொலர் நிதி உதவி வழங்கிய போதும் இலங்கையால் சிறு தொகையை பெற்றுக்கொள்ள முடிந்தது என எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட முட்டாள்தனமானது.
உக்ரைன்-ரஷ்ய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதனாலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதனாலும் ஐரோப்பிய நாடுகளின் நேச நாடு என்பதினாலும் இவ்வாறு கடனுதவி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.