சர்ச்சையில் சிக்கிய சஜித்! பேசுபொருளாகியுள்ள காணொளி
நேற்றையதினம் மகா சங்கத்தினர் ஒன்றுகூடி அராசாங்கத்திற்கு எதிராக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஹெராப்பிட்டிய ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
முழு இனவாதக் கூட்டத்தையும் அங்கு பார்க்க கூடியதாக இருந்ததாக சிவில் செயற்பாட்டாளர் ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்துக்கு எதிர்கட்சிதலைவர் சஜித் பிரேமதாஸ சென்றுள்ளதை புகைப்படங்களில் காணக்கூடியதாகவுள்ளது.
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளில் “தமிழர் தமிழருக்குதான் வாக்களிக்க வேண்டும் என்பது இனவாதம் தான், அது யாருடைய வாயிலிருந்து வந்தாலும் இனவாதம்” என்று தமிழரசுக்கட்சியின் உறுப்பினரொருவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறிருக்கு சஜித்திற்கு ஆதரவளித்த தமிழரசுக்கட்சி தற்போது பிரேமதாஸ இந்த கூட்டத்திற்கு சென்றமை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri