சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை குறித்து வெளியான தகவல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) இலங்கையில் சாதாரண தரம் கற்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச இங்கிலாந்தில் உயர் கல்வியையும் பல்கலைக்கழக பட்டப்படிப்பினையும் முன்னெடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை
எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் பட்டம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றாடல்துறை தொடர்பில் சஜித் இன்னும் கற்று வருகின்றார். சஜித் பிரேமதாசவின் பல்கலைக்கழக பட்டம் குறித்த சான்றிதழ்கள் தேவையெனில் எதிர்வரும் நாட்களில் காண்பிக்க முடியும்.
எதிர்க்கட்சித் தலைவரின் சான்றிதழ்களை கேட்பதற்கு முன்னர் தற்போதைய ஆளும் கட்சியின் உறுப்பினர்களது கல்வித் தகைமை சான்றிதழ்களை வெளிப்படுத்த வேண்டுமென நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அண்மையில் சஜித் பிரேமதாச சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தவில்லை என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களில் பதிவொன்று பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.