ரணில் - அநுர மீது சஜித் குற்றச்சாட்டு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாட்டைக் கட்டியெழுப்பும் தனது முயற்சிகளைத் தோற்கடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார ஆகியோர் சதி செய்வதாக சஜித் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் 2024 தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கொலன்னாவையில் நடைபெற்ற 37ஆவது பேரணியில் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மீண்டும் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சக்தி
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரே "தூய்மையான மற்றும் வெளிப்படையான சக்தி" என்று தமது கட்சியை விபரித்த பிரேமதாச, ஜே.வி.பி.யை கடுமையாக விமர்சித்ததுடன் அதன் கடந்த காலத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 1970ஆம் ஆண்டு மற்றும் 1980ஆம் ஆண்டுகளில், நாட்டைக் கொளுத்தி, தொழிற்சாலைகளை அழித்த, பாடசாலைகளை எரித்த, காட்டுமிராண்டித்தனமான கொலைகளைச் செய்த ஒரு குழு உள்ளது.
அத்துடன், இந்த குழுவின் செயலாளராக இப்போது ரணில் விக்ரமசிங்க செயல்படுகிறார் என்றும் சஜித் கூறியுள்ளார்.