எதிர்க்கட்சி தலைமை பதவி பறிபோகும் கட்டத்தில் சஜித் : கட்சிக்குள் கடும் பிளவு
இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கட்சிக்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இடைக்கால அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்பதில் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இந்தக் குழு பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுடன், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தினர் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்தால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.




