சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கின்றது சஜித் அணி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கின்றது.
இந்தத் தகவலைக் கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதா அல்லது அதைப் புறக்கணிப்பதா என்பது தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எடுப்பதற்காகக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று முற்பகல் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது பெரும்பான்மையான உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பது என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று ஜே.வி.பி அறிவித்திருந்தது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
எனினும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என ஜே.வி.பியினரும் மற்றும் விமல்
வீரவன்ச, உதய கம்மன்பில வாசுதேவ ஆகியோரின் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
