நாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்து தேர்தல்? சஜித்தின் மூளையை பரிசோதிக்க வேண்டும் - அநுரகுமார
அரசாங்கத்தின் இயலாமைக்கு மத்தியில் நாட்டு மக்களின் உயிர்களை பணயம் வைத்து தேர்தல் நடத்தக் கோருவது கொடூரமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வைரஸ் தொற்று பரவி நாட்டு மக்கள் கஸ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் தேர்தல் ஒன்றை கோரும் எதிர்கட்சித் தலைவர் சஜித்தின் மூளையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தேர்தல் ஒன்றை கோருவது மக்கள் தொடர்பில் சிந்தித்து அல்ல, மாறாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரண்டு கட்சிகளும் தங்களை தாங்களே குறைகூறிக் கொள்வது வழமை.
கடந்த முறை 100 கோவிட் தொற்றாளர்களும் சில மரணங்களும் பதிவான போது தேர்தல் பிற்போடப்பட்டது. ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில் தொற்றாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் மரணங்கள் பதிவாகின்ற போது தேர்தல் நடத்தக் கோரும் நபரின் மூளை கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டியது என்று அநுரகுமார திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.