சமூக நீதியை மீற முயற்சிக்கும் அரசாங்கம்! எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள தகவல்
அரசாங்கம் சில பணக்கார குபேரர்களுக்கும்,மோசடி செய்பவர்களுக்கும் சலுகை அளிப்பதன் மூலம் முதலாளித்துவத்திற்கு வழி வகுக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி திருத்தச் சட்டம் மூலம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கறுப்பு பணத்தை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் மூலம் மோசடி செய்பவர்கள் தங்கள் கருப்பு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
யாராவது வரி செலுத்தாமல் பதுக்கி வைத்திருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதோடு, அவற்றுக்கு போதுமான ஏற்பாடுகள் உள்ளன என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு பதிலாக, 1%, மோசடி செய்பவர்கள் மற்றும் சில பணக்கார குபேரர்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகைகளை வழங்க முயற்சிக்கிறது.
நாட்டில் முதலாளித்துவத்தை அனுமதிப்பதன் மூலம் அரசாங்கம் சமூக நீதியை மீற முயற்சிப்பதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த சட்டமூலம் ஊடாக சொத்துக் குவித்து மற்றும் வரிகளை மறைத்து வைத்திருக்கும் மோசடி செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் இந்தக் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.