அனைத்து புனிதர்கள் தேவாலய வெடிகுண்டு நாடகம்:விசாரணையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்து
கொழும்பு- பொரல்லையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் வெடிகுண்டு நாடகம் தொடர்பான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பொரல்லையின் அனைத்து புனிதர்கள் தேவாலயத்திற்குள் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பொரல்லையில் இன்று(11.1.2026) இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிருஷாந்த இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், பொரல்ல தேவாலயத்தில் நடந்த குண்டு நாடகத்தை தற்போதைய அரசாங்கம் விசாரிக்க வேண்டும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையையும் கண்டறிய வேண்டும் என்று திருச்சபை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.