சகோதரத்துவ தொடருந்தை வவுனியாவில் வரவேற்ற பிரதி அமைச்சர்
சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்த சகோதரத்துவ தொடருந்தை வவுனியா தொடருந்து நிலையத்தில் வைத்து இளைஞர் விவகார, விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஏரங்க குணசேகர வரவேற்றார்.
யூலை 23 இனக் கலவரத் தினத்தை புதிய அரசாங்கம் ''சகோதரத்துவ தினமாக'' அறிவித்து கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை ''சகோதரத்துவ தொடருந்து'' என்ற பெயரில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பயணித்து யாழில் இத் தினத்தை கொண்டாடவுள்ளனர்.
அந்தவகையில், கொழும்பில் இருந்து சகோதரத்துவ தொடருந்து என்ற தொனிப் பொருளுடன் வந்த யாழ்தேவி கடுகதிப் தொடருந்தை இளைஞர், விவகார விளையாட்டுத் துறை அமைச்சர் ஏரங்க குணசேகர, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வவுனியா மாநகர சபை உறுப்பினர்களான விஜயகுமார், சங்கர், லக்ஸ்சனா ஆகியோரும், வவுனியா இளைஞர் கழக உறுப்பினர்களும் வரவேற்று தெற்கில் இருந்து வந்த இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, குறித்த தொடருந்தில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வவுனியா இளைஞர், யுவதிகள் சிலரும் சகோதரத்துவப் பயணமாக யாழ் நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
