மஹிந்த தரப்பிற்குள் உள்ளக மோதல் தீவிரம்
எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கும் இடையில் தற்போது மோதல் ஒன்று உருவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தின்போதே சாகரவும், கம்மன்பிலவும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
ஆளுங்கட்சிக் கூட்டத்துக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் கம்மன்பில கலந்து கொண்டார்.
இதன்போது கூட்டம் நடைபெறும் அறையின் கதவருகில் நின்று கொண்டிருந்த சாகர காரியவசத்தை பார்த்த கம்மன்பில “சாகர எப்படி சுகம்” என்று வினவியுள்ளார்.
இதற்கு சாகரவிடம் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் சாகரவை நினைக்கும் போது உண்மையாக கவலையாக இருக்கிறது என உதய கம்மன்பில தெரிவிள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.