அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய மொட்டு கட்சி!
வடக்கில் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இனவாதத்தை விதைத்ததன் பிரதிபலனையே ஜே.வி.பி தற்போது அறுவடை செய்கிறது என மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
தொடர்ந்துரையாற்றிய அவர், மகிந்த ராஜபக்ச பிரிவினைவாத போரை முடிவுக்கு கொண்டு வந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தினார்.ஆனால் ஜே.வி.பி மீண்டும் வாக்குகளுக்காக பிரினை வாதத்தை விதைத்தனர்.
'வினை விதைத்தவன் வினை அறுப்பான்'என்பதற்கேற்ப அதை இன்று அரசாங்கம் வடக்கில் அறுவடை செய்கிறது.
ஒரு நாடு என்ற வகையில் நாம் இதை பாரதூரமாக பார்க்க வேண்டியுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கை குழைக்க ஜே.வி.பி எவ்வளவு தான் பொய் கூறினாலும் மக்கள் ஏற்கொள்ள மாட்டார்கள்.
நாட்டில் முப்பது வருட யுத்தத்தை முடிவுறுத்தி, பாரிய அபிவிருத்தியை செய்த மகிந்தவின் நாமத்தை பொய்களால் மறைக்க முடியாது.''என கூறியுள்ளார்.





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
