சாகலரத்நாயக்க மாத்தறையில் இருந்து கொழும்புக்கு மாற்றம்
கொழும்பு மேற்கு தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.க.வின் கொழும்பு மேற்கு தொகுதிக் கூட்டம் கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்றிருந்தது.
அங்கு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவில் ஜனாதிபதி அலுவலக பணியாளர் குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தொகுதியின் புதிய பிரதான அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
புதிய நிர்வாக சபை நிர்வாகிகள் தெரிவு
அத்துடன் மேற்கு கொழும்பு மற்றும் கிழக்கு கொழும்பு ஆகிய இரு தொகுதிகளுக்கான சபைக் கூட்டம் கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றதுடன், புதிய நிர்வாக சபை நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.
முன்னதாக சாகல ரத்நாயக்க, மாத்தறை தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
