கிளிநொச்சியில் உயிரிழப்புக்களின் பின்னர் பாலத்தின் பாதுகாப்பு சீரமைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் A35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்திருந்த பாலத்தின் பாதுகாப்பு சீர் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு குறியீடுகளோ, மின்விளக்குகளோ பொருத்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக கடந்த 31 ஆம் திகதி இடம் பெற்ற வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு பணிகள்
இதனையடுத்து நேற்றைய தினம் (03.01.2025) அந்தப் பகுதிக்கு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

அவரது பணிப்புரைக்கு அமைவாக பாலத்தின் இரு பகுதியிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளதுடன் வீதி பாதுகாப்பு குறிகாட்டிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
தற்பொழுது மக்கள் பாதுகாப்பாக பயணிக்க கூடிய வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri