பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நால்வர்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முவதோர உயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 470 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 12, பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிடோ சந்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 கிராம் 880 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாகந்தை பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுல்லவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 770 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
