வற் வரி அதிகரிப்பு: மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும்: சிறீதரன் எச்சரிக்கை(Video)
வற் வரி அதிகரிப்பானது மிகவும் பொருளாதார இக்கட்டான நிலையிலுள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரகலய போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு வருமானம் இல்லை, இந்த நிலையில் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
மக்களின் நலன்
இதன் காரணமாக அரகலய போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும். சுயமாக மக்களின் நலன்களை பற்றி அரசு சிந்திக்காது சர்வதேச நாணய நிதியத்திற்காகவே செயற்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆயத்தமாகவே ஜனாதிபதி வருகை உள்ளது. பிரச்சினையை நாடாளுமன்றத்திலே தான் தீர்க்க முடியும் என்கிறார். கட்டடம் கட்டி தருகிறேன், கைத்தொழில் பேட்டை அமைக்கிறேன் என்று மாத்திரம் சொல்வதற்காக வருகிறார்.
வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கிய பணத்திற்கான நடவடிக்கைகள் ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் தேர்தலுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
ஆனால், தேர்தலும் நடைபெறவில்லை. தமிழ் மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்ற நோக்கத்தோடு தான் அவர் வடக்கிற்கு வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புது வருடத்தில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
