ஜே.வி.பி ஆட்சி செய்தால் பெட்ரோல் 600 ரூபாவிற்கு விற்கப்படும்: மரிக்கார் சாடல்
ஜே.வி.பி கட்சி தவறுதலாகவேனும் ஆட்சி பீடம் ஏறினால், ஒரு லீற்றர் பெட்ரோலின்விலை 600 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் புரிதல் உள்ள எவரும் ஜே.வி.பிக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“ஜே.வி.பி கட்சிக்குள் அரசியல் புரிதல் உடையவர்கள் எவரும் கிடையாது.
போலி குற்றச்சாட்டு
இந்நிலையில், அந்தக் கட்சியினர் ஆவணங்களை வைத்துக் கொண்டு போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

ஆட்சி பொறுப்பு கிடைத்தால் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்த தெளிவான திட்டங்கள் எதனையும் ஜே.வி.பி இதுவரையில் வெளியிடவில்லை.
உண்டியல்களில் பணம் சேர்த்து அல்லது நிறுவனங்களிடம் கப்பம் கோரி நாட்டை ஆட்சி செய்ய முடியுமா?
மேலும், ஜே.வி.பி ஆட்சி செய்தால் பேசும் உரிமையும் முடக்கப்படும்.” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam