தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் பேசுபொருள் மாத்திரமே: சிறிதுங்க தெரிவிப்பு
தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயமாகும் என ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறான முயற்சி இடம்பெற்றாலும் இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் அதனைக் கடைசியில் கைவிட்டு விடுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இந்தியா விரும்பும் தெற்கு வேட்பாளரையே வடக்கு - கிழக்குத் தமிழர்கள் ஆதரிப்பார்கள்.
அரசியல் களத்தில் நாடி பிடித்துப் பார்ப்பதற்காக அவ்வப்போது ஏதேனும் ஏற்பாடுகள் இடம்பெறும். அந்தவகையிலேயே தமிழ் பொது வேட்பாளர் விடயமும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம். அதைப்
பற்றிப் பேசிப் பயன் இல்லை.
ஏனெனில் இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலானது இந்தியாவுக்கும்,
சீனாவுக்கும் இடையிலான போட்டியாகவே அமையவுள்ளது.
கடைசியாக மாலைதீவில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இந்த நிலைமையே காணப்பட்டது. அந்தவகையில் மொட்டுக் கட்சி தரப்புக்குச் சீனாவும், சஜித் தரப்புக்கு இந்தியாவும் பின்புலமாக இருக்கும்.
இந்தியாவின் கோரிக்கை
தற்போது தமிழ் பொது வேட்பாளர் பற்றி பேசுபவர்கள், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அந்நாடு சார்பு தெற்கு வேட்பாளரையே ஆதரிப்பார்கள்.
அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்குச் சுய நிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள கட்சி எமது கட்சியாகும்.
இங்குள்ள கட்சிகளிடம் இந்தக் கொள்கை இல்லை. எனவே, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மையப்படுத்தியதாக எமது கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
