இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி

Mano Ganeshan Ranil Wickremesinghe India Election Sri Lanka Presidential Election 2024
By Rakesh Aug 20, 2024 10:15 PM GMT
Report

400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான் பெட்ரோல், உணவு, எரிவாயு, மருந்து வரிசைகள், மின்வெட்டுகள், உர தட்டுபாடு ஆகியவற்றில் இருந்து எமது நாடு காப்பாற்றப்பட்டது.

இந்த உண்மையை மறைத்து ரணில் விக்ரமசிங்க நரித்தனமாகப் பேசிச் திரிகின்றார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மாவனல்ல, ருவன்வெல்ல ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரணிலின் சின்னம் தொடர்பிலான முறைப்பாடு: மறுக்கும் ஆணைக்குழு அதிகாரி

ரணிலின் சின்னம் தொடர்பிலான முறைப்பாடு: மறுக்கும் ஆணைக்குழு அதிகாரி

கடன் நிதி உதவி 

அவர் மேலும் உரையாற்றுகையில், "இலங்கைக்கு இந்திய அரசின் தொடர் கடன் நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய அரசு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொள்கை ரீதியாக முடிவு எடுத்தது.

இவை ரணில் ஆட்சிக்கு வர முன்னர் தீர்மானிக்கப்பட்டவை. அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராகவும், ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் ரணில் பதவிகளை ஏற்றார். ரணில் பதவிக்கு வந்து இவற்றைப் பயன்படுத்தினார்.

ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றைக் கொண்டு வரவில்லை. இந்த உதவிகள் இந்திய அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும். இதனாலேயே, இந்நாட்டில் அத்தியாவாசியப் பொருள் வரிசைகள் நின்றன.

இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி | S Lanka Only Recovered With Indian Loan Assistance

மின் வெட்டு நின்றது. விவசாயத்துக்குத் தேவையான உரம் கூட ஓமன் நாட்டில் இருந்து இந்தியக் கடன் உதவி நிதி மூலம் பெற இந்திய அரசு அனுமதி தந்தது. இதுதான் உண்மை.

இதை மறுக்க முடியுமா என சரடு விடுபவர்களுக்கும், உண்மை தெரியாமல் பேசி திரிபவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன் என, இந்திய தேசம்தான், எமது நாட்டைக் காப்பாற்றியது என்ற அடிப்படை உண்மையை மறைத்து தான் ஏதோ நாட்டை காப்பாற்றியது போல் போகும் இடமெல்லாம் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார்.

இந்தப் பொய்யை அவரது புதிய, பழைய எடுபிடிகளும் கூறி வருகின்றார்கள். நாட்டில் ஒரு தரப்பினர் உண்மை தெரியாமல் இதை நம்புகின்றார்கள். 400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் நிதி உதவியை இந்திய ஒன்றிய அரசு எமது நாட்டுக்கு வழங்கியது.

இந்திய கடன் உதவியால்தான் மீண்டது இலங்கை : ரணிலுக்கு மனோ பதிலடி | S Lanka Only Recovered With Indian Loan Assistance

அதேபோல் 400 கோடி இலங்கை ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை இந்திய தமிழ்நாடு மாநில அரசு எமக்கு வழங்கியது. இவற்றால்தான் எமது வரிசைகள் நீங்கின. இவை ரணில் ஆட்சிக்கு வர முன் தீர்மானிக்கப்பட்டவை.

இந்த உதவிகள் இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும். ரணில் பதவிக்கு வந்து அவற்றைப் பயன்படுத்தினார். ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றைக் கொண்டு வரவில்லை. ஆனால், இவை தனது சாதனைகள் என ரணில் வழமை போல் நரித்தனமாகக் கூறி வருகின்றார் என கூறியுள்ளார்.

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் : சந்தோஷ் ஜா

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் : சந்தோஷ் ஜா

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி - நாடு கடத்த நடவடிக்கை

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி - நாடு கடத்த நடவடிக்கை

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US