ஈரோஸ் அமைப்பினர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பொத்துவில் அமைப்பாளர் உள்ளிட்டோர் ரணிலுக்கு ஆதரவு
ஈரோஸ் அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் உள்ளிட்டோர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவித்து நேற்று (2) அம்பாறையில் ஐக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளர் தயாகமகேவுடன் இணைந்து கொண்டனர்.
தேர்தல் பிரசாரம்
மேலும், ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி தலைவர் இரா.பிரபாகரன் தலைமையில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சி பிரதான கணக்காளர் க.கண்ணன், திருக்கோவில் பிரதேச பொறுப்பாளர் சா.நவராஜா, பொத்துவில பொறுப்பாளர் வ.பிறேமானந்தன், அம்பாறை மாவட்ட பெண்கள் தலைவி அ.பிரதீபா உட்பட்ட குழுவினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை நகரிலுள்ள ஜனாதிபதியின் தேர்தல் பிரசார காரியாலயத்தில் ஐக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளர் தயாகமகேயிடம் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எச். அப்துல் ரகுமான், எம்.ஜ.அஸ்மீர் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டதையடுத்து அவர்களை சம்பிராதாய பூர்வமாக வரவேற்று அவர்களுக்கான பொறுப்புக்களை தயாகமகே வழங்கி வைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
