இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம்! விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் பேசிய ஆளும் கட்சி உறுப்பினர்
நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் உண்மையானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தப் போராட்டங்களுக்குப் பின் யாரும் இல்லையென நினைக்க வேண்டாம், சில சக்திகள் இருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பியின் புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர், நந்தசேன ஆவார். ஜே.வி.பியின் முக்கியஸ்தரான அவர், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பலமடைந்து கொண்டு வந்தபோது, அமிர்தலிங்கத்தை கொன்றார்.
இதன்படி பார்த்தால் தங்களுடைய அணிக்குள் வளர்ந்து வருவோரே முதலில் கொல்லப்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிள்ளைகள் வெளியேறினர், அம்மாமார்கள் வீதிக்கு இறங்கினர், அதனை ஆயுத போராட்டமாக மாற்றிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri