வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ரணிலுக்கு புகழாரம் - செய்திகளின் தொகுப்பு
எரிவாயு கொண்டு வர மில்லியன் டொலர்கள் இல்லாத நாட்டை இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையகப்படுத்தி வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தொடர்பில் மேலும் அவர், “ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது எரிவாயு வாங்குவதற்கு ஒரு மில்லியன் டொலர் கூட இல்லாத நிலையில் நாடு இருந்தது.
பின்னர் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் வர்த்தகர்கள் மற்றும்
வங்கிகளுடன் கலந்துரையாடி பணத்தை கண்டுபிடித்து எரிவாயு கொண்டு வரும் திறனைப்
பெற்றார்” எனத் தெரிவிததுள்ளார்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |