ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி
ரஸ்யாவில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதன்படி ரஸ்யாவில் வீசா மற்றும் மாஸ்டர் கார்ட் சேவைகள் ரத்து செய்யப்பட்டதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஸ்யா படையெடுத்ததை தொடர்ந்து பல நாடுகள் தடைகளை விதித்துள்ளன.
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வருவதாகவும், நேற்று முதல் வீசா மற்றும் மாஸ்டர் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக ரஸ்யாவின் நாணய அலகான ரூபெலின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றன்னர்.
எவ்வாறெனினும் யுத்தம் இடம்பெற்றாலும் ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர்கள் தொடர்ந்தும் கல்வியைத் தொடர வேண்டுமென விரும்புவதாக மாணவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.