பிணைக்கைதிகளை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயார்! : மனித உரிமைகள் ஆணையர் தகவல்- செய்திகளின் தொகுப்பு (Video)
உக்ரைன்- ரஷ்ய போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா தெரிவித்துள்ளார்.
உலகநாடுகளின் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதில் இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவப்படைகளை அழித்து, அவர்களின் ராணுவ வீரர்களை தொடர்ந்து மாறிமாறி கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ளவும் மாஸ்கோ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,