உக்ரைனில் புடினின் படைகளால் ஆட்கடத்தல்கள் தொடர்கின்றன! சுமியில் பிரதி முதல்வர் கடத்தல்!
வடக்கு உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள உள்ளூர் துணை நரக முதல்வர் ஒருவரை ரஸ்ய துருப்புக்கள் கடத்திச் சென்றதாக பிரதேசத்தின் தலைவர் டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார்
நோவா ஸ்லோபோடா மாவட்டத்தின் துணை நகர முதல்வரான ஒலெக்ஸி சிபாயேவ் என்பவரே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
சுமிக்கு வடமேற்கே சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் வைத்து அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பிரதேசம் ரஸ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
சுமி இன்னும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் சுற்றியுள்ள பிரதேசங்கள் ரஸ்ய பீரங்கிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.
ஏற்கனவே பல உள்ளூர் உக்ரைனிய அதிகாரிகள் ரஸ்ய ஆக்கிரமிப்புப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் அதிகாரிகள் ரஸ்யர்களுக்கு விசுவாசமானவர்களை கொண்டு மாற்றப்பட்டுள்ளனர்.