நேட்டோவின் மறைமுக தலையீடு! உக்ரைன் போர் முனையில் ஆயுதபலம் அதிகரிக்கிறது!
ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக உக்ரைனின் ஆயுதப்பலம் அதிகரிக்கப்படுகிறது.
ரஷ்யா தற்போது உக்ரைனில் தமது ஆக்கிரமிப்பை தொடருகின்ற நிலையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கு படை உதவியை தவிர்த்து வருகின்றன.
படை உதவி மேற்கொள்ளப்படுமானால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழியேற்படுத்திவிடும் என்பதே நேட்டோவின் கருத்தாக உள்ளது.
எனினும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நேட்டோ நாடுகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.
ஏற்கனவே இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க ஜோ பைடனின் நிர்வாகம், புதிதாக 777 மில்லியன் டொலர்களுக்கான ஆயுத உதவியை இன்று அறிவிக்கும் என்று தே வோல் ஸ்ரீட் ஜேனல் தெரிவித்துள்ளது.

இந்த ஆயுத உதவியில், ஸ்ரிங்கர்ஸ் மற்றும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, உக்ரைனுக்கு 2014ஆம் ஆண்டு முதல் 2.5 பில்லியன் டொலர்களுக்கான ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது.