ஹே ஹே எழுந்திரு! உக்ரைனுக்காக புரட்சிப் பாடல் வெளியானது! (Video)
பிரித்தானியாவின் புகழ்பெற்ற ரொக் இசைக்குழுவான பிங்க் ஃபிலாய்ட் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டுள்ளது.
அந்த ட்ராக் "ஹே ஹே ரைஸ் அப்" என்று அமைந்துள்ளது.
இந்த பாடல் உக்ரைனிய இசைக்குழுவான பூம்பாக்ஸின் குரல்களைக் கொண்டுள்ளது.
உக்ரைனிய தலைநகரில் உள்ள சோபியா சதுக்கத்தில் உக்ரைன் நாட்டு பாதுகாப்பு படைவீரரான ரொக் பாடகர் ஒருவர் பாடிய பாடலே தம்மை இந்த முயற்சிக்கு ஈர்த்ததாக ரொக் இசைக்குழுவான பிங்க் ஃபிலாய்ட் தெரிவித்துள்ளது.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிங்க் ஃபிலாய்டின் முதல் பாடல் இதுவாக அமைந்துள்ளது.
இந்த பாடலின் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானம் அனைத்தும் உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிக்காகச் செல்லும் என்று ரொக் இசைக்குழுவான பிங்க் ஃபிலாய்ட் தெரிவித்துள்ளது.
Here is the official video for 'Hey Hey Rise Up', Pink Floyd’s new Ukraine fundraiser feat Andriy Khlyvnyuk of Boombox. Stream / download from midnight. https://t.co/4U3P3WAQOZ
— Pink Floyd (@pinkfloyd) April 7, 2022