உக்ரைன் ரஷ்ய போரின் எதிரொலி: 2024ல் திவாலாகும் நிலையில் ரஷ்யாவின் பொருளாதாரம்
`ரஷ்யாவின் கருவூலம் ஓராண்டுக்குள் காலியாக வாய்ப்பிருப்பதால், வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படலாம்’ என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் ஒரு வருடத்தையும் கடந்து தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்த, உலக நாடுகள் பல்வேறு வகைகளில் முயன்றன. ஆனால், ரஷ்யா போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை.
பொருளாதாரத் தடை
அதைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பெப்ரவரி 2022-லிருந்து, 11,300-க்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கின்றன.
மேலும், ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புகளில் சுமார் 300 பில்லியன் டொலர் முடக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பொருளாதாரத் தடைகளின் விளைவாக இழந்த வருவாயை மீட்பதற்குப் பல்வேறு வகைகளில் ரஷ்யா முயன்றுவருகிறது.
கடந்த ஆண்டு உக்ரைன் படையெடுப்புக்கு முன்னர் ரஷ்யாவின் வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றிய ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம், 51 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை
கடந்த ஆண்டின் வருமானத்தைவிட ஜனவரியில் ரஷ்ய அரசின் வருவாய் 35 சதவிகிதம் குறைந்தும், அதேநேரத்தில் செலவினங்கள் 59 சதவிகிதம் உயர்ந்தும் இருக்கின்றன.
இந்த நிலையில்தான், சைபீரியாவில் கடந்த வியாழக்கிழமை பொருளாதார மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ரஷ்யக்குழு "அடுத்த ஆண்டு பணம் இருக்காது. எங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை" என்று தெரிவித்திருக்கிறது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது