தொடரும் தாக்குதல்கள்! உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை விரும்பும் ரஷ்ய ஜனாதிபதி!
போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், உக்ரைன் விடயத்தில் தமது கோரிக்கைகள் என்ன என்பதை ரஷ்யா, துருக்கியிடம் விளக்கியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப்பிடம் இதனை விளக்கியுள்ளார் உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் மற்றும் நேட்டோவில் சேர விண்ணப்பிக்கக் கூடாது என்பது இதில் முதலாவது கோரிக்கையாகும்.
இதனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கைக்கு ரஷ்யாவின் துல்லியமான கோரிக்கைகளாக இவை அமையும் என்று புடின், துருக்கியின் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய கோரிக்கைகள் ரஷ்ய தரப்பின் கௌரவத்தை காப்பாற்றும் கோரிக்கைகளாக அமைந்துள்ளன.
ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுதக் குறைப்பு செயல்முறையை உக்ரைன் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் உக்ரைனில் ரஷ்ய மொழிக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் புடின் கோரியுள்ளார்
இதேவேளை இந்த விடயங்களில் உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பு தனக்கும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் தேவை என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸின் நிலையைப் பற்றி புடின், உக்ரைனில் இருந்து ஏற்கனவே பிரிந்து சென்ற கிரிமியாவின் நிலையை வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam