இது சந்திக்கவேண்டிய பேச வேண்டிய நேரம்! ரஷ்யாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு! (காணொளி)
மொஸ்கோவுடன் தாமதமின்றி அர்த்தமுள்ள அமைதி மற்றும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று இரவு உரையாற்றும்போது அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
உக்ரைன் மீதான படையெடுப்பின்போது ஏற்பட்ட சேதங்களை குறைத்துக்கொள்ள ரஷ்யாவுக்கு இது வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது சந்திக்க வேண்டிய நேரம், பேச வேண்டிய நேரம், உக்ரைனுக்கான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நீதியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார்.
இல்லையெனில், ரஷ்யாவின் இழப்புகளை மீட்க பல தலைமுறைகள் தேவைப்படும் என்று எச்சரித்தார்
உக்ரைனின் தெற்குப் பகுதியான கிரிமியாவை ரஷ்ய படைகள் கைப்பற்றி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ரஷ்ய தலைநகரில் இடம்பெற்ற இந்தப் பேரணியில் மொத்தம் சுமார் 200,000 பேர் பங்கேற்றனர் இந்தநிலையில் உக்ரைன் மீதான தற்போதைய படையெடுப்பில் ஏறத்தாழ கிரிமியா படையெடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட அதே எண்ணிக்கையிலான ரஷ்ய துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன.
எனினும் இதில் 14,000 ரஷ்ய படை வீரர்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்து ஊனமுற்றுள்ளனர்.
இது கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.
இதுவே மூன்று வாரங்களாக இடம்பெற்ற போரின் விலையாகும்.
எனவே போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
