ரஸ்யாவுக்குள் புடினுக்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பு! நோபல் பரிசு பெற்றவரின் அறிவிப்பு! (காணொளி)
ரஸ்யாவில் புடினுக்கு எதிரான எதிர்ப்புகள் வலுப்பெற்று வருகின்றன.
உக்ரைன் மீது பாரிய படையெடுப்பை அவர் திட்டமிட்டபோதும் சுமார் ஒரு மாதக்காலமாக ரஸ்ய படைகள், உக்ரைனில் முன்னேற்றத்தை காணுவதில் பின்னடைந்துள்ளன.
உக்ரைன் படையினர் மற்றும் பொதுமக்களின் உறுதியான சரணடையாத நிலைப்பாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து ரஸ்ய படைகள், தமது பின்னடைவை தாங்கிக்கொள்ளாத நிலையில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதன் காரணமாக இதுவரை ஒருகோடி பேர் வரை இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் ரஸ்யாவில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் அரச தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ஒருவர், புடினுக்கு எதிராக தமது எதிர்ப்பை நேரடி செய்தி ஒளிபரப்பின்போது காட்டினார்.
இன்று புதிதாக ரஸ்யாவின் நோவா கெசட்டா செய்தித்தாளின் தலைமை ஆசிரியர்,உக்ரைன் ஏதிகளுக்கு நிதி திரட்டுவதற்காக தமக்கு கிடைத்த அமைதிக்காக நோபல் பரிசு பதக்கத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்.
டிமிட்ரி முராடோவ் என்ற ஊடகவியலாளர், ரஸ்ய படையெடுப்பினால்; 10 மில்லியன் உக்ரைனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளமையை அடுத்து தாம் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்