சமாதான பேச்சில் நம்பிக்கையற்றுள்ள உக்ரைன் மக்கள்! மேசையை தட்டி உரையாற்றிய ஸெலென்ஸ்கி!(video)
துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று நடைபெறும் உக்ரைன்- ரஸ்யா சமாதானப் பேச்சுக்களைப் பற்றி உக்ரைன் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் இன்னா சோவ்சுன் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினையை இராணுவ ரீதியாக சமாளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை விடுத்து தற்போது ரஸ்;யாவுடன் செய்யப்படும் எந்த ஒப்பந்தமும் உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நிறைய இராணுவ உதவிகளை பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டிய சோவ்சுன், நாட்டிற்கு முக்கியமாக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றைக் கொண்டு உக்ரேனியப் படைகளால் ஆக்கிரமிப்பு ரஸ்ய படைகளின் பாதியளவு டாங்கிகளை அழிக்க முடிந்தது என்றும் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் இன்னா சோவ்சுன் கூறியுள்ளார்.
இந்தநிலையில் இப்போது மரியுபோலில் மக்களைக் கொன்று குவிக்கும் பீரங்கிகளை அழிக்கப் பயன்படும் நீண்ட தூர ஆயுதங்கள் மற்றும் வான் வெளித்தாக்குதல்களை தடுக்கும் ஆயுதங்கள் அவசியம் என்று அவர் குறி;;ப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஸ்ய தரப்புடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு துருக்கியின் தலைநகர் இஸ்தானாபுலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் ரஸ்யா மீதான எண்ணெய் தடை உட்பட பொருளாதாரத் தடைகளை கடுமையாக்க மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கத்தைய தடைகளின் செயலற்ற தன்மையை அவர் நேற்று இரவு உரையில் கடுமையாக விமர்சித்தார்.
மேற்கத்தைய நாடுகளின் வலுவான தடுப்புத் தடைகள் முன்னதாகவே உலக சக்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், படையெடுப்பைத் தடுத்திருக்கலாம் என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்
தமது ஏழு நிமிட உரையின் போது அவர் சில சமயங்களில் மேசையை கையினால் .தட்டினார்.
இதேவேளை மேலும் ஆயுதங்களை வழங்குமாறு நாடுகளிடம் வலியுறுத்த தாம் திட்டமிட்டுள்ளதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri