உக்ரைன் போர்க்களம்! மீண்டும் ஒருமுறை புடினுடன் மெக்ரோன் பேச்சு! அமெரிக்காவின் எச்சரிக்கை!
பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேற்று செவ்வாய்கிழமை தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
போர்நிறுத்தம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்;த கலந்துரையாடலின்போது எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
எனினும் ஜனாதிபதி மெக்ரோன் தனது முயற்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை உறுதியாகக் கொண்டுள்ளார் என்று பிரான்ஸின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு போர் நிறுத்தம் மற்றும் உக்ரைன்- ரஸ்யா நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு வழியில்லை என்று பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
இதேவேளை உக்ரைனில் கடினமான நாட்கள் எதிர்கொள்ளப்படுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடனின் பிரஸ்ஸல்ஸ் பயணத்திற்கு முன்னதாக சல்லிவன் வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை ரஸ்யாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா காணவில்லை என்றும் சல்லிவன் இதன்போது குறிப்பிட்டார்.