உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது! ருசிரா கம்போஜ்- செய்திகளின் தொகுப்பு
உக்ரைனில் நடந்து வரும் மோதல் காரணமாக உலகம் முழுவதும் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு என்பன தொடர்பில் உலகளவில் கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்கிறது என ஐ. நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.
ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'உக்ரைன் நிலைமை குறித்து இந்தியா தொடர்ந்து கவலை கொண்டுள்ளது . உக்ரைன் மோதலின் தாக்கம் ஐரோப்பாவிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் உலகளவில் கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கருங்கடல் தானியங்கள் மற்றும் உரம் தொடர்பான ஒப்பந்தம் எதிர்வரும் நாட்களில் புதுப்பிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்' எனவும் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,