தாக்குதல்களுக்கு மத்தியில் மூன்று நாட்டு தலைவர்கள் உக்ரைனுக்கு திடீர் பயணம்! (காணொளி)
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு தாக்குதல்களுக்கு மத்தியில் நேற்று செவ்வாய்கிழமை, போலந்து, சுலோவேனியா மற்றும் செக் மக்கள் குடியரசின் பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்று ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த சுலோவேனிய பிரதமர் ஜான்ஸ் ஜென்ஸா, உக்ரைன் மக்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.
"அவர்களின் சண்டை எமது சண்டை. அதனை ஒன்றிணைந்து வெல்வோம்" என்று குறிப்பிட்டார்.
"செக் மக்கள் குடியரசின் பிரதமர் பீட்டர் பயாலா தமது கருத்தில், நீங்கள் எங்களின் வாழ்க்கைக்காக சண்டையிடுகிறீர்கள்"
“உங்கள் சுதந்திரத்துக்காக நீங்கள் சண்டையிட்டாலும் அது எங்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான சண்டை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஐரோப்பா உக்ரைனுடன் இருப்பதாக அவர்கள் கூறினர். அத்துடன் இரண்டு தலைவர்களும் உக்ரைனுக்கு மகிமை என்று உக்ரைன் மொழியில் தெரிவித்தனர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்த பின்னர், அங்கு பயணம் செய்த வெளிநாட்டு தலைவர்களின் முதல் பயணமாக இது அமைகிறது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam