உக்ரைன் - ரஷ்ய களமுனைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஆயுதங்களும் யுக்திகளும்(Video)
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து வரும் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போரிட்டு வருகின்றது.
விட்டுக் கொடுப்புகள் எதுவுமின்றி கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக இரு நாடுகளும் கடுமையாக போர் புரிந்து வரும் நிலையில் இரு நாடுகளுமே புதிய உத்திகளை கையாண்டு தங்களது போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இரு நாடுகளுக்குமே, உலக நாடுகளின் ஆதரவும், எதிர்ப்பும் அதிகரித்தும் வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தில் தற்போது பயன்படுத்தப்படும் யுக்திகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம் விசேட தொகுப்பு,