ஓராண்டை நெருங்கும் உக்ரைன் போர்! பதிலடி கொடுக்க தயாராகும் புடின் தரப்பு : வெளியான எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைனை ஊடுருவி ஓராண்டை நெருங்கும் நிலையில், உக்ரைன் போரின் ஓராண்டு நினைவு நாளின்போது ரஷ்யா எதையாவது செய்யக்கூடும் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஓராண்டை நெருங்கும் உக்ரைன் போர்
ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனை ஊடுருவியது. சிறிது நாட்களில் உக்ரைனை வென்றுவிடலாம் என ரஷ்யாவும், இது விரைவில் முடிந்துபோகும் சிறிய பிரச்சினை என உலகமும் நினைத்திருந்த நிலையில், உக்ரைன் போர் ஓராண்டை நெருங்குகிறது.
உலக நாடுகள் பலவற்றில் விலைவாசி உயர்வு முதலான பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திய போர், இன்னமும் முடிந்தபாடில்லை.
இந்நிலையில், உக்ரைன் போரின் ஓராண்டு நினைவு நாளின்போது ரஷ்யா எதையாவது
செய்யக்கூடும் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே, ரஷ்ய தரப்பிலிருந்து, இதுவரை முக்கியப் படைகள் இன்னமும் போரில் குதிக்கவில்லை என்னும் ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், புடின் என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை.
இதற்கிடையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவால்
எரிச்சலடைந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், அதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov மிரட்டல் விடுத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.