உக்ரைன் படையெடுப்பு - சீனாவை களமிறக்கும் மேற்கத்தைய நாடுகள்! இன்று முக்கிய பேச்சு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஸோல்ஸ் ஆகியோர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டாக பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் மோதலில் சீனாவின் மீது ஐரோப்பிய தலைவர்களின் அழுத்தம் அதிகரிப்பதை இந்த முயற்சி காட்டுவதாக பிபிசி கூறுகிறது.
முன்னதாக திங்களன்று, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், ரஷ்ய படையெடுப்பின் பின்னர் இரண்டாவது முறையாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சு நடத்தினார்.
இதன்போது "பகை நிறுத்தம் மற்றும்; உரையாடலுக்கான தயார் நிலைக்கான சீனாவின் ஆதரவு கோரப்பட்டுள்ளது
அத்துடன் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு மனிதாபிமான வழித்தடங்களை நிறுவும் ஆதரவும் சீனாவிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்பின்போது தாக்குதலுக்கு சீனா "வருத்தம்" தெரிவித்தது. ஆனால் தமது வெளியுறவு கொள்கையின்படி, மொஸ்கோவைக் கண்டிக்கவோ அல்லது எதிர்க்கும் நிலைப்பாட்டையே வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை உக்ரைய்ன் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் மத்தியஸ்தராக செயற்படமுடியும் என்று சீனா அறிவித்துள்ளது சீனாவின் வெளியுறவு அமைச்சர் பீஜிங்கில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மொஸ்கோவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வு ஒன்று தொடர்பிலேயே இந்த முயற்சி சாத்தியமாகும்; என்று ராஜதந்திர தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.