புடின் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை! பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் உக்ரைன் வீரர்கள்
ரஷ்யாவிற்கு எதிரான எதிர் தாக்குதலில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பிரித்தானிய டாங்கிகள் குறித்த பயிற்சியை பிரித்தானியாவில் முடித்து உக்ரைனிய குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
பிரித்தானிய இராணுவ அதிகாரிகள், Challenger 2 டாங்கிகளை எவ்வாறு இயக்குவது மற்றும் போராடுவது என்பது குறித்து உக்ரைனிய பணியாளர்களுக்கு பல வாரங்களின் பின்னர் பயிற்சி நிறைவடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
சிறந்த ஆயுதங்களுடன் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புகிறார்கள்
14 சேலஞ்சர் 2 டாங்கிகளை பிரித்தானியா உக்ரைனுக்கு அனுப்பும் என்று ஜனவரி மாதம் ரிஷி சுனக் அறிவித்த சிறிது நேரத்திலேயே துருப்புக்கள் பிரித்தானியாவிற்குச் சென்றன.
பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் இதுதொடர்பில் தெரிவிக்கையில், உக்ரைனியப் படைவீரர்கள் "சிறந்த ஆயுதங்களுடன் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புகிறார்கள்‘‘ என்றார்.
மேலும், பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ கலை
உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இரினா சொலோடர் (Iryna Zolotar), பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் ஏற்கனவே உக்ரைனில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த டாங்கிகள் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் எதிர் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கவச-துளையிடும் வெடிமருந்துகளை வழங்குவதற்கான வாக்குறுதியை பிரித்தானியா பின்பற்றினால், ரஷ்யா அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார்.
இருப்பினும், அவரது எச்சரிக்கையை மீறி உக்ரைன் மற்றும் பிரித்தானியா தரப்பிலிருந்து இப்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் சேலஞ்சர் டாங்கிகளை முகநூலில் பாராட்டிய உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர், அதனை "இராணுவ கலை" என்று வர்ணித்தார்.
மேலும் "ஒரு வருடத்திற்கு முன்பு, எங்கள் கூட்டாளர்களின் ஆதரவு இவ்வளவு வலுவாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்" என்று அவர் பெருமையாக கூறினார்.