உக்ரைனில் பாரிய படை இழப்பை ஏற்றுக்கொண்ட ரஸ்யா! அவமானம் இல்லை என்கிறார் பேச்சாளர்! (Video)
உக்ரைன் போரில் ரஸ்யா குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்துள்ளமையை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பேச்சாளரான டிமிட்ரி பெஸ்கோவ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
செய்திச் சேவை ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
உக்ரைன் தலைநகரில் இருந்து பின்வாங்கியமை, ஆயிரக்கணக்கான துருப்புக்களை இழந்தமை மற்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்னும் ஆட்சியில் இருக்கின்றமை என்பன போர் "அவமானமாக" இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளி;த்த அவர், இது ‘தவறான புரிதல்’ என்று கூறினார்.
எனினும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ரஸ்யா இழந்துவிட்டதா என்று மீண்டும் கேட்டதற்கு, அவர் ஆம் என்று பதிலளித்தார். துருப்புக்களின் குறிப்பிடத்தக்க இழப்புகள் உள்ளன,
இது தங்களுக்கு சோகமான செய்தி என்று அவர் கூறினார்
இதேவேளை கியேவ் பகுதி மற்றும் வடக்கு நகரமான செர்னிஹிவ் ஆகியவற்றிலிருந்து வெளியேறுவது அமைதிப் பேச்சுவார்த்தையின் போது பதற்றத்தை நீக்குவதற்கான ஒரு நல்லெண்ண நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.
நேட்டோ, தமது எல்லைகளை நோக்கி நகரத் தொடங்கியதால் ரஸ்யா பதற்றமடைந்தது என்று பெஸ்கோவ் குறிப்பிட்டார்.
முன்னதாக உக்ரைன் போரில் 1,351 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஸ்யா கூறியிருந்தது.
எனினும் இது 7,000 முதல் 15,000 வரை இருக்கும் என்று உக்ரைன் மற்றும் நேட்டோ தரப்புக்கள் கூறுகின்றன.