உக்ரைனியர்கள் வீரர்கள்! உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய உயர்நிலை பெண் புகழாரம்!
ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா வெள்ளிக்கிழமை எதிர்பாராதவிதமாக கிய்வ் சென்று உக்ரைனைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
"தைரியம், வலிமை, உறுதி" என்ற முழக்கத்துடன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்த புகைப்படத்தை அவர் ட்வீட் செய்துள்ளார்.

உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசினார்;.
உக்ரைனிய மக்கள் வீரர்கள். “நாங்கள் அனைவரும் நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு நீங்கள் போராடுகிறீர்கள்” சுதந்திரம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்பவற்றின் மதிப்புகள் இல்லாமல், வேறு எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவுக்கு எதிராக மேலும் மேலும் கடுமையான தடைகள் அவசியம் என்றும் அவர் தமது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதம மந்திரிகள் உக்ரைனுக்கு ஒற்றுமையைக் காட்டுவதற்காக கியேவிற்கு விஜயம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.