இலங்கைக்கு மற்றும் ஒரு சர்வதேச சமூக வலியுறுத்தல்!
உக்ரைனுக்கான தீவிர ஆதரவில் இணையுமாறு இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இறையாண்மை மற்றும் ஜனநாயக நாடான உக்ரைன் மீது ரஸ்யாவின் நியாயமற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு இராஜதந்திர சமூகம் கடுமையான வார்த்தைகளில் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த மூர்க்கத்தனமான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுவதாகும்.
பொதுமக்கள் சுற்றுப்புறங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஸ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இது ஏராளமான பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
இலட்சக்கணக்கான சாதாரண பொதுமக்கள் - முக்கியமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் - தங்கள் வீடுகளில் இருந்து அண்டை நாடுகளுக்கு ஏதிலிகளாக வெளியேறி வருகின்றனர்.
இது கடந்த 70 ஆண்டுகளில் மிக வேகமான ஏதிலி நெருக்கடியாகும் என்று தூதர்கள் தமது கூட்டறிக்கையில் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கைக்கான தூதரக பொறுப்பாளர்கள் என்ற வகையில், உக்ரைன் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனம் உட்பட சர்வதேச சட்டங்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை தாம் வலியுறுத்துவதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகம் கோரியுள்ளது.
அவுஸ்திரேலிய, கனடா, ஐரேர்பிய ஒன்றியம்,பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே,ஜப்பான்,ரோமானியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இது தொடர்பாக வலியுறுத்தல் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
